மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற வாணி விழா-படங்கள்
கல்லூரி முதல்வர் M.Y.மாஹிர் அவர்களின் பங்குபற்றுதலுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒழுங்கமைப்பில் 08/10/2019 காலை வாணி விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த 09 நாட்களும் பூசை பஜனைகள் இடம்பெற்று விஜயதசமி அன்று பொங்கல் பொங்கி கல்வியின் அதிபதியாம் சரஸ்வதியினை போற்றி மகிழ்ந்தனர். மாணவர்களுக்கு கட்டுரை கோலம் போடுதல் போட்டிகள் வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வைத்த கல்லூரி முதல்வர் தனது உரையில் ஒவ்வொரு சமயத்தவர்களும் தமது பண்டிகைகளை சிறப்பிக்கும் போது ஏனைய சமயத்தின் மாணவர்களும் அறிந்து கொள்ள உதவியாக இருப்பதோடு பாடசாலைகளில் இவ்வாறான நிகழ்வுகள் மாணவர்களிடையே நல்ல புரிந்துணர்வினை ஏற்படுத்தும் என்றார்.
மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற வாணி விழா-படங்கள்
Reviewed by Author
on
October 09, 2019
Rating:

No comments:
Post a Comment