வரலாற்றில் முதல் முறை..! விண்வெளியில் வீராங்கனைகள் செய்யப்போகும் சாகசம் -
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை விண்வெளியில் அமைத்துள்ளன. அங்கு பல்வேறு விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த வீரர்கள் புதிய கட்டுமானப் பணிகளுக்காக விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று, விண்வெளியில் நடந்து வேலை செய்வார்கள். அப்போது பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வார்கள். ஆனால், இவ்வாறு பணிகளை மேற்கொண்டவர்கள் ஆண் விண்வெளி வீரர்களாக மட்டுமே இருந்து வந்தார்கள்.
இதுவரை 1965ஆம் ஆண்டில் இருந்து 213 வீரர்கள் விண்வெளியில் நடந்து இருக்கிறார்கள். இவர்களுடன் 14 வீராங்கனைகள் மட்டுமே இணைந்து விண்வெளியில் நடந்திருக்கிறார்கள். எனினும் தனியாக வீராங்கனைகள் மட்டுமே சென்றதில்லை.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி, முதல் முறையாக இரண்டு விண்வெளி வீராங்கனைகள் மட்டும் விண்வெளியில் நடந்து ஆய்வு மையத்தின் வெளியில் உள்ள பேட்டரிகளை மாற்றுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் விண்வெளி ஆடை பற்றாக்குறை காரணமாக அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
இதனால் கிறிஸ்டினா கோச் மற்றும் ஆன் மெக்லைன் ஆகிய 2 வீராங்கனைகளும் ஏமாற்றம் அடைந்தனர். அதன் பின்னர் தற்போது நாசா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மெயிர் ஆகிய இரண்டு வீராங்கனைகள் வருகிற 21ஆம் திகதி, வீரர்களின் துணையின்றி விண்வெளியில் தனியாக நடந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு நடக்கும் பட்சத்தில், புதிய வரலாற்று சாதனையாக இது அமையும். மேலும் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வாகவும் இது அமையும் என்று கூறப்படுகிறது.

வரலாற்றில் முதல் முறை..! விண்வெளியில் வீராங்கனைகள் செய்யப்போகும் சாகசம் -
Reviewed by Author
on
October 12, 2019
Rating:
No comments:
Post a Comment