இலங்கை குகையில் கிடைத்த புராதன பொருட்கள் தொடர்பில் ஜேர்மன் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்!
ஆனால் சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்று அந்த நம்பிக்கை சரியானது அல்ல என்று நிரூபித்துள்ளது.
ஜேர்மனியின் Max Planck Institute for the Science of Human History என்ற நிறுவனத்தின் தொல் பொருள் ஆய்வாளரான Oshan Wedageம் அவரது சகாக்களும் மேற்கு இலங்கைத் தீவான Fa-Hein Lenaவில் கிடைத்த microliths எனப்படும் சிறு ஆயுதங்களை ஆய்வு செய்ததில் அவை 48,000 முதல் 45,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வகை ஆயுதங்கள் இதற்கு முன்பு ஐரோப்பிய நாடுகளில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்முறை கிடைத்துள்ள இந்த ஆயுதங்கள் தெற்காசிய மழைக்காடு ஒன்றில் கிடைத்துள்ள மிகப்பழமையான ஆயுதங்களாகும்.
ஆதி மனிதன் மழைக்காடுகளில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளை உருவாக்கிக் கொள்வது தொடர்பான விவாதங்களில் எப்போதுமே இலங்கை முக்கிய இடத்தை பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Fa-Hien Lena குகையில் கிடைத்த கற்களால் செய்ப்பட்ட ஆயுதங்களை மிகத்துல்லியமாக அளவெடுத்து ஆராய்ந்தபோது, ஆதி மனிதன் இலங்கையில் முதல் முதலாக குடியேறியதற்கு முக்கிய ஆதாரமாக அவை உள்ளன என்கிறார் Oshan Wedage.



இலங்கை குகையில் கிடைத்த புராதன பொருட்கள் தொடர்பில் ஜேர்மன் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்!
Reviewed by Author
on
October 06, 2019
Rating:
No comments:
Post a Comment