இந்திய அணிக்கு எதிராக கெத்து காட்டிய தமிழர்!
தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்று இருக்கும் பூர்வீக தமிழரான செனூரன் முத்துசாமி, இந்திய அணிக்கு எதிராக தன் அறிமுகப் போட்டியில் ஆடினார்.
இதில் அவர் பந்துவீச்சில் பெரிதாக செயல்படுவார் என நினைத்திருந்த நிலையில் அவரால் அதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
ஆனாலும் துடுப்பாட்டத்தில் முத்துசாமி தன்னை நிரூபித்தார்.

முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க 376 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்கள் இழந்தாலும், அந்த அணி 431 ஓட்டங்கள் வரை எட்ட முக்கிய காரணமாக இருந்தார். 106 பந்துகள் சந்தித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்.
இரண்டாம் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் அனைத்து முக்கிய வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் வீழ்ந்தனர்.
70 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது தென்னாப்பிரிக்கா அணி. முத்துசாமி ஏழாவது வீரராக களமிறங்கினார்.
அவரும், பீடிட்டும் சேர்ந்து 91 ஓட்டங்கள் கூட்டணி அமைத்து போராடினர். முத்துசாமி, முதல் இன்னிங்க்ஸ் போல இந்த முறையும் நூறு பந்துகளுக்கும் மேல் சந்தித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
108 பந்துகள் சந்தித்து 49 ஓட்டங்கள் எடுத்தார் முத்துசாமி. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தும், ஒரு ஓட்டத்தில் அரைசதம் அடிக்கும் அரிய வாய்ப்பை நழுவவிட்டார்.
இருந்தபோதிலும் தான் ஒரு நல்ல துடுப்பாட்ட வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக கெத்து காட்டிய தமிழர்!
Reviewed by Author
on
October 09, 2019
Rating:
No comments:
Post a Comment