கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு எமக்கு தேவையில்லை! நாமல் -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிசாட் பதியூதீன் ஆகியோரின் ஆதரவு தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பாலமாக அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்.
ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு வரப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை, கிழக்கிற்கும் பின்னர் அங்கிருந்து வடக்கிற்கும் கொண்டு செல்லப்படும் எனவும் இதன் ஊடாக வடக்கையும் தெற்கையும் இணைக்க முடியும்.
இதனையே மஹிந்த ராஜபக்ச எதிர்பார்க்கின்றார் என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பந்தனைப் போன்று பொய் சொல்வதில்லை எனவும், எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியூதீன் ஆகிய தரப்புக்கள் தமக்குத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு எமக்கு தேவையில்லை! நாமல் -
Reviewed by Author
on
October 25, 2019
Rating:

No comments:
Post a Comment