மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு - சிறீதரன்mp -
தாயக விடுதலை போரில் உயிர் நீத்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு 23.11.2019 காலை 11 மணியளவில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்து கொண்டார்.
இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பொது உருவ படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது, நிகழ்வில் தாயக விடுதலைப்போரில் உயிரிழந்த வீரர்களிற்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது வீரர்களின் பெற்றோர் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் மாவீரர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நினைவுரை ஆற்றியிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.
மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு - சிறீதரன்mp -
Reviewed by Author
on
November 24, 2019
Rating:

No comments:
Post a Comment