பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு 3வது தடவையாகவும் தெரிவான இலங்கையர் -
பிரித்தானியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ரணில் ஜயவர்தன வெற்றி பெற்றுள்ளார்.
ரணில் ஜயவர்தன தொடர்ந்தும் மூன்றாவது முறையாக தனது ஆசனத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் அபார வெற்றியை பதிவு செய்து ஆட்சி அமைக்கவுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ரணில் ஜயவர்தன North East Hampshire பகுதியில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் முதன் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகினார். மீண்டும் 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றார்.
இம்முறை தேர்தலில் ரணில் ஜயவர்தன 35,280 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் 37,754 வாக்குகளை பெற்றுள்ளார். இம்முறை வாக்கு வீதத்தில் சிறிய பின்னடைவை அவர் சந்தித்துள்ளார்.
அவரது தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பெரி ஜோன்ஸ் 5,760 வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளார்.
கன்ஸர்வேட்டிவ் கட்சியின் பிரதி தலைவராக ரணில் ஜயவர்தன செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு 3வது தடவையாகவும் தெரிவான இலங்கையர் -
Reviewed by Author
on
December 14, 2019
Rating:

No comments:
Post a Comment