நல்லை ஆதீன குருமுதல்வர் - நித்தியானந்தாவுடன் எந்த தொடர்பும் இல்லை!
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவுடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனது முகநூலில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தனது அடுத்து இலக்கு இலங்கையில் உள்ள நல்லை ஆதீனம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்த வெளியிட்டுள்ள நல்லை ஆதீன குருமுதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இதனை நாம் சர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றோம். சுவாமி நித்தியானந்தாவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.
எமது இந்து மதப் பணிகளுக்கு இடையூறு வரும் வகையிலும் எமக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
நல்லை ஆதீன குருமுதல்வர் - நித்தியானந்தாவுடன் எந்த தொடர்பும் இல்லை!
Reviewed by Author
on
December 14, 2019
Rating:

No comments:
Post a Comment