அமெரிக்காவில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் -
அமெரிக்காவின் கெமன் தீவில் உணவகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இலங்கையர் ஒருவர் கொடூர தாக்குதலினால் உயிரிழந்துள்ளார்.
ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான தினேஷ் அஸங்க பெர்னாண்டோவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் அஸங்க அமெரிக்க உணவகம் ஒன்றிற்கு பணிக்காக சென்றுள்ளார். உயிரிழந்தவரின் சகோதரர் அமெரிக்காவின் வேறு பிராந்தியத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
உயிரிழந்தவர் கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி இறுதியாக தொலைபேசியில் உரையாடியதாகவும் அதன் பின்னர் 30ஆம் திகதி மகன் உயிரிழந்ததாக தகவல் கிடைத்ததென அஸங்கவின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் உயிரிழந்தவர் பணியாற்றிய உணவகத்தில் ஏற்பட்ட மோதலின் போது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அந் நாட்டு பொலிஸார் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்த சிசிடீவி காணொளிகளை சோதனையிட்டுள்ளனர். அதில் உள்ள சாட்சிகளுக்கமைய தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
பொதுவாக குறித்த இலங்கையர் பணி செய்த இடத்தில் அதிகாலை நேரத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் இருப்பதாக கூறப்படுகின்றது. இலங்கையில் வருமானம் குறைந்த குடும்பங்களில் இருந்து அங்கு செல்லும் பலர் இவ்வாறான தாக்குதலுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலில் உயிரிழப்பவர்களின் சடலங்களை அவர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்ததாக கூறி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தொடர்ந்து அமைதியாக இருக்க முடியாதென கூறும் அந்த நாட்டு பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் -
Reviewed by Author
on
December 26, 2019
Rating:

No comments:
Post a Comment