விடுதலை அரசியலில் இளைஞர்கள் ஈடுபட இதுவே தருணம் தமிழரசு கட்சியின் இளைஞர் அணி உபதலைவர் சட்டத்தரணி டினேசன்
விடுதலை அரசியலை இளைஞர்கள் முன்னோக்கி நகர்த்த வேண்டிய காலம் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் இளைஞர்கள் அரசியலில் தமக்கான அடையாளத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும் எனவும் மன்னார் மாவட்ட தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவரும் அகில இலங்கை தமிழரசு கட்சியின் உபதலைவருமான சட்டத்தரணி டினேசன் தெரிவித்துள்ளார்
தமிழரசு கட்சியின் 70 வருட அரசியல் பூர்த்தி வருடத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை சுகந்திரம் அடைந்து தொடக்கம் தொடர்சியாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு என செயற்படும் அரசியல் கட்சியாக தமிழரசு கட்சி செயல்பட்டு வருகின்றது. அன்று தொடக்கம் இன்றுவரை சலுகைகளுக்கும் பதவிகளுக்கும் விலை போகாமல் உரிமை அரசியலை முன்னேடுத்துவரும் தமிழ் அரசு கட்சியில் தொடர்சியாக இளைஞர்களின் பக்களிப்பும் உள்வாங்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். அரசியல் என்றால் பெரியவர்களுக்கு தான் என்ற காலம் இன்று இல்லை. அரசியலில்
இளைஞர்களாகிய நாம் தலையிடாவிட்டால் நம் வாழ்வில் நிச்சயம் அரசியல் தலையிடும்
ஒவ்வொரு முறையும் வாக்கு மாத்திரம் அளித்து விட்டு அரசியல் வாதிகளை விமர்சிப்பதையே தற்போது அனைவரும் செய்துவருகின்றோம். எமக்கான இடத்தை நாம் நிரப்பிக்கொள்ள வேண்டியது எமது பொறுப்பாகும் எனவே இளைஞர்கள் அரசியலில் பார்வையாளர்களாக மாத்திரம் இருந்துவிடாது பங்குதாரர்களாகவும் ஆகவேண்டும் அதற்கான வாய்பை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி விரிவு படித்தியுள்ளது. எனவே அரசியலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் எம்மோடு இணைந்து உரிமை போராட்ட அரசியலுக்கான எமது இருப்பை உறுதிபடுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Reviewed by Author
on
December 29, 2019
Rating:

No comments:
Post a Comment