மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் பௌத்த மதத்திற்கு அவமானம்! எம்.பி.மனோ கணேசன் சாடல் -
மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், பௌத்த மதத்திற்கு அவமானம் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், மத போதகர் ஒருவரை தாக்கிய காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளமுன்னாள் அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்,
“மட்டக்களப்பு வண. அம்பிடிய சுமண ரத்ன தேரர், பெளத்த மதத்திற்கு அவமானம். இவர் பகிரங்கமாக ஏனைய மத போதகர்களை, அரசு ஊழியர்களை தாக்கி, இனவாதமும், தூஷணமும் பேசி, பொலிஸாரை மதிக்காமல், சட்டத்தை கையில் எடுக்கிறார்.
இதுபற்றி வண. மகாநாயக்க பெளத்த தேரர்களின் கருத்தை நாட போகிறேன்.” என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் பௌத்த மதத்திற்கு அவமானம்! எம்.பி.மனோ கணேசன் சாடல் -
Reviewed by Author
on
December 29, 2019
Rating:

No comments:
Post a Comment