வடகொரியா அதிகாரிகளுக்கு கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு -
உலக நாடுகளை தன்னுடைய அணு ஆயுத சோதனை மூலம் மிரட்டி வரும் கிம் ஜாங் உன், சமீபத்தில் நாட்டின் முக்கிய உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அதில், வட கொரியாவில் பொருளாதார வளா்ச்சியில் தீா்க்கமான திருப்பு முனையை ஏற்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டதாகவும், தேசிய பொருளாதாரத்தின் முக்கிய தொழில்துறைகளில் நிலவும் மோசமான நிலையை அவசரமாக சரி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கிம் விரிவான முறையில் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் வடகொரியா தொடர்ந்து அணு சக்தி சோதனையில் ஈடுபட்டு வருவதால், அணு சக்தி பேச்சுபேச்சுவார்த்தையில் அமெரிக்கா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு, இந்தாண்டோடு முடிவடைவதால், கிம் பொருளாதார விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வடகொரியா அதிகாரிகளுக்கு கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு -
Reviewed by Author
on
December 31, 2019
Rating:

No comments:
Post a Comment