அரசியல் தலைவர்களுக்கு நாட்டை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது: மெல்கம் ரஞ்சித் -
அரசியல் தலைவர்களுக்கு நாட்டை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சக்தி வளப் பிரச்சினைக்கு தீர்வு நிலக்கரியா? என்ற தொனிப் பொருளில் கொழும்பில் இன்று நடைபெற்ற கருத்தரங்களில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தை மூடி விட்டு மாற்று வழிகளில் மின் உற்பத்தி செய்ய வேண்டும்.
நாட்டை வேறு நபர்களிடம் தாரைவர்த்துக் கொடுக்க முடியாது, இதனை நிறுத்த வேண்டும்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மூடிவிட்டால் நல்லது, வெறும் மாற்று வழிகள் பயன்படுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தலைவர்களுக்கு நாட்டை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது: மெல்கம் ரஞ்சித் -
Reviewed by Author
on
December 31, 2019
Rating:

No comments:
Post a Comment