தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்ற முடிவு பாரதூரமானது : தேசிய சமாதானப் பேரவை -
நாட்டில் இடம்பெறும் சில சம்பவங்கள் சமூகங்களுக்கு இடையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக தேசிய சமாதானப் பேரவை கவலை வெளியிட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கம் தீர்வாகாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிக்கையை முதலாவது உதாரணமாக சமாதானப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டாவதாக போரின்போது காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்தை பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
மூன்றாவதாக தேசிய கீதத்தை தமிழில் பாடக்கூடாது என்ற முடிவு பாரதூரமானது என்று தேசிய சமாதானப் பேரவை குறிப்பிட்டுள்ளது.
1949ம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினம் டொரிங்டன் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாப்பட்டபோது அங்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டதாக பேரவை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நாட்டில் சமாதான சூழ்நிலையை பேண அரசாங்கம் அனைத்து இன பிரதிநிதிகளுடனும் கலந்தாலோசனைகளை நடத்தவேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்ற முடிவு பாரதூரமானது : தேசிய சமாதானப் பேரவை -
Reviewed by Author
on
December 31, 2019
Rating:

No comments:
Post a Comment