வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் : யாழ். அரச அதிபர் -
மாவட்ட செயலகங்களால் வேலைவாய்ப்புக்கள் வழங்குவதற்கான தரவுகள் சேகரிக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்களுக்காக மாவட்ட செயலகங்களில் தரவுகள் சேகரிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாவட்ட செயலகத்தால் வருடாந்தம் மாவட்ட ரீதியாக பிரதேச செயலகங்கள் ஊடாக திரட்டப்படும் வேலையற்றோர் தொடர்பான தரவுகள் சேகரிப்பது ஒரு வழமையான செயற்பாடாகும்.
இதனை சமூக வலைத்தளங்களில் தவறாக வேலைவாய்ப்பு வழங்கப்படுவதற்கான தகவல் சேகரிப்பு எனவும் வேலைவாய்ப்பு பெறுவதற்காக மாவட்ட செயலகத்திற்கு தேசிய அடையாள அட்டையுடன் செல்லுமாறு தகவல்கள் பரப்பப்படுகின்றன.
எம்மால் மேற்கொள்ளப்டும் தகவல் சேகரிப்பிற்கும், வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இது ஒரு தவறான செய்தி, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் : யாழ். அரச அதிபர் -
Reviewed by Author
on
December 31, 2019
Rating:

No comments:
Post a Comment