ஓமான் சென்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடக்கும் கொடுமை!
தான் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தன்னை மீட்டு தாயகம் திரும்ப வழி செய்யுமாறு பாதிக்கப்பட்ட பெண் இன்று உறவினர்களிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு அளம்பிலை சேர்ந்த செல்வகுமார் பிரியதர்சினி வயது 36 என்னும் குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
இறுதியுத்தத்தில் பாதிக்கப்பட்ட குறித்த பெண் தனது குடும்பத்தின் வறுமையை போக்க கடந்த 04-09-2019ம் திகதி வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் என தன்னை அடையாளப்படுத்திய நசீர் என்னும் நபர் ஒருவர் தன்னிடம் மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்று ஓமான் நாட்டிற்கு அனுப்பிவைத்ததாகவும், அங்கு தான் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தன்னை மீட்டு தாயகம் திரும்ப வழிசெய்யுமாறும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த பெண்ணின் உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வினவியபோது குறித்த பெண் சட்டவிரோத ஆட்கடத்தல் நபர்களினால் ஓமான் நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஓமான் சென்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடக்கும் கொடுமை!
Reviewed by Author
on
December 13, 2019
Rating:

No comments:
Post a Comment