எதிர்வரும் பொதுத்தேர்தலில் சம்பந்தன் போட்டியிடமாட்டார்!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசு கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஆர்.சம்பந்தன் போட்டியிடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
86 வயதான ஆர் சம்பந்தன், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.சிகிச்சைக்காக அவர் வெளிநாட்டுக்கு சென்றிருப்பதே இதற்கு காரணமாகும்.
இந்த நிலையில் டெலோ, தமிழரசுக்கட்சி, புளொட் ஆகிய கட்சிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து இதன்போது ஆராய்ந்துள்ளன.
வடக்கு,கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தமது கட்சி போட்டியிட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே இணக்கம் வெளியிட்டுள்ளது.
எனினும் வன்னி மாவட்டத்தில் இந்திய வம்சாவளி ஒருவரை களமிறக்கவேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலாநாதனின் கோரிக்கையை ஏனையக் கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் கூட்டு சேர்வது தொடர்பிலும் தமிழரசுக்கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை வட மாகாண சபையின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் இணைந்த கட்சி இந்த முறை தேர்தலில் தனியாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் சம்பந்தன் போட்டியிடமாட்டார்!
Reviewed by Author
on
December 30, 2019
Rating:

No comments:
Post a Comment