முல்லைத்தீவு நாயாறு கடலில் தந்தையும் -மகனும் பரிதாப மரணம் -
முல்லைத்தீவு - நாயாறு கடலில் குளிக்கச் சென்ற தந்தையும், மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாயாறு கடற்பகுதியில் இன்று பிற்பகல் குளித்துக்கொண்டிருந்த போது தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், அவருடைய 16 வயது மகன் ஒருவர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது உயிரிழந்தவர்கள் களனி,பலுகம ரக்கன் தலுவ வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய வருண கமகே மற்றும் அவரது மகனான லபிது கமகே 16 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கடலில் இருந்து மீட்கப்பட்டவரின் சடலம் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மகனின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு நாயாறு கடலில் தந்தையும் -மகனும் பரிதாப மரணம் -
Reviewed by Author
on
December 30, 2019
Rating:

No comments:
Post a Comment