சம்பளமில்லாமல் குடும்ப நிலைமையால் கவலையில் பிரபல இயக்குனர்-சிவக்குமார்
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர் கே.பாலசந்தர் அவர்கள். ரஜினி, கமல் என பல ஹீரோக்களை உருவாக்கியவர். அண்மையில் முக்தா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 60 ம் ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் நடிகர் சிவக்குமார், சித்ரா லெட்சுமணன், ஆனந்த் பாபு, கிரேஸி பாலாஜி, லதா ரஜினிகாந்த், சந்தான பாரதி, பாடகி சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி என பலர் கலந்துகொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய சிவக்குமார், கே.பாலசந்தர் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பே சம்பளமில்லா விடுப்பு எடுத்து சினிமாவில் நிறைய வேலை செய்துவந்தார்.
முக்தா நிறுவனத்தின் பூஜைக்கு வந்த மலர் படத்திற்காக சினிமா வசனம் எழுதினார். சினிமாவை நம்பி கையில் இருக்கும் வேலையை விடுவதா? நம்பலமா என்று குடும்ப நிலைமையால் கவலையில் இருந்த போது முக்தா வீட்டிலிருந்து மாதம் ரூ 500 அனுப்பிவைத்தார்கள். அதனால் கே.பியின் வீடு நிம்மதியாக இருந்தது. அவருக்கு தைரியம் கொடுத்தது முக்தா நிறுவனம் தான் என கூறினார்.
சம்பளமில்லாமல் குடும்ப நிலைமையால் கவலையில் பிரபல இயக்குனர்-சிவக்குமார்
Reviewed by Author
on
December 30, 2019
Rating:

No comments:
Post a Comment