கண் பார்வை குறைபாட்டை போக்க வேண்டுமா? வீட்டில் இருந்தே...
கணினி பயன்பாட்டாளர்கள் பெரும்பாலும் கண்களை தொடர்ந்து இமைப்பது இல்லை. இது நாளடைவில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகின்றது.
அந்தவகையில் கண்பார்வை குறைபாடை நிவர்த்தி செய்ய சில கண்களுக்கு சிலபயிற்சிளை மேற்கொண்டாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

திரிகோணாசனம் செய்முறை
- விரிப்பில் கிழக்கு நோக்கி இரு அடி கால்களை அகற்றி நிற்கவும். கைகளை பக்கவாட்டில் நேராக நீட்டவும்.
- இப்பொழுது மூச்சை வெளிவிட்டுக் கொண்டு இடது கையை வலது கால் பெருவிரலைத் தொடவும்.
- வலது கையை மேல் நோக்கி வைத்து உங்கள் கண்களால் வலது கை விரலை 20 விநாடிகள் பார்க்கவும். பின் மெதுவாக மூச்சை உள் இழுத்து சாதாரண நிலைக்கு வந்து மூச்சை வெளிவிடவும்.
- இதேபோல் மூச்சை வெளியிட்டு வலது கையால் இடது காலை தொடவும்.
- இடது கையை மேல் நோக்கி வைத்து உங்கள் கண்களால் இடது கைவிரலை 20 விநாடிகள் பார்க்கவும்.
- பின் மெதுவாக மூச்சை உள் இழுத்து நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறைகள பயிற்சி செய்யவும்.
சூரிய ஒளி சிகிச்சை
- அதிகாலை சூரியன் உதயமாகும் நேரம் மூன்று நிமிடங்கள் சூரியனை உற்று நோக்கவும்.
- பின் மெதுவாக கண்களை மூடி ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும். இதேபோல் மூன்று முறைகள் செய்யவும்.
கண்களின் மேல் மஜாஜ்
- விரிப்பில் கிழக்கு நோக்கி அமரவும். கண்களை மூடவும். இரு கைகளையும் சுண்டுவிரல் ஒட்டி இருக்கும் கைகளின் மேடான பகுதியை மூடிய கண்களின் மேல் மெதுவாக வைத்து கண்களிலிருந்து காதுப்பகுதியை நோக்கி வருடிவிடவும்.
- இது ஒரு மஜாஜ் செய்வது போல் இருக்கும். பத்து முதல் பதினைந்து முறை இவ்வாறு செய்யவும்.
கண் கழுவுதல்
- குளிர்ந்த சுத்தமான குடி தண்ணீரை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றவும். அதில் தண்ணீர் வழிய வழிய நிரப்பிக் கொள்ளவும்.
- தலையைக் குனிந்து கொண்டு கண்ணை விழித்து அந்த பாத்திரத்தினுள் கண்ணை மூழ்கச் செய்து கண் விழியினை உருட்டவும். இமையை லேசாக மூடித் திறக்கவும். மீண்டும் புதிதாக நீர் நிரப்பி அடுத்த கண்ணுக்கும் இவ்வாறு செய்யவும்.
- ஒவ்வொரு கண்ணிற்கும் இரண்டு முறை செய்யவும். காலையில் குளிக்கும் பொழுதும், மாலையிலும் ஒரு முறை செய்யலாம்.
- இதனை டி.வி. பார்த்த பின்பு, சினிமா பார்த்த பின்பு, சாலைகளில் போய் வந்த பின்பு, அதிகம் படிப்பவர்கள் இந்த கண் கழுவும் பயிற்சியைச் செய்யலாம்.
- இந்த பயற்சி செய்வதனால் கண்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது, கண்கள் குளிர்ச்சியடைகின்றது, கண்களிலுள்ள தூசிகள், அழுக்குகள் வெளியாகின்றது.
தீபத்தை உற்று நோக்குதல்
- ஒரு விரிப்பில் நேராக அமர்ந்து கொள்ளவும். வஜ்ராசனத்தில் அமர்ந்தால் மிகவும் நல்லது. உங்கள் கண்முன் ஒரு தீபம் ஏற்றவும்.
- அந்த தீபத்தை அதன் சுடரை ஒரு இரண்டு நிமிடம் உற்று பார்க்கவும். பின் ஒரு நிமிடம் கண்களை மூடவும். இதுபோல் மூன்று முறைகள் செய்யவும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம்.
கண் பார்வை குறைபாட்டை போக்க வேண்டுமா? வீட்டில் இருந்தே...
Reviewed by Author
on
December 30, 2019
Rating:
No comments:
Post a Comment