பிரித்தானியா தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் முடிவு வெளியானது! முன்னிலையில் யார்? -
நேற்று காலை நடைபெற்று வாக்கு பதிவு, இரவு 10 மணிக்கு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை அடுத்த சில நிமிங்களிலே துவங்கிவிட்டது.
இதற்கிடையில் கருத்து கணிப்பில் கன்சர்வெடிவ் கட்சி அதிக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று அறிவிக்கப்பட்டதால், அக்கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆனால் இதில் முதலில் Newcastle Central-ன் அறிவிப்பு வெளியானது, அதன் படி தொழிலாளர் கட்சியை சேர்ந்த Chi Onwurah 21,568 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், இதற்கு அடுத்தபடியாக கன்சர்வெடிவ் கட்சி 9,290 இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் பிரக்சிட் பார்ட்டி 2709 வாக்குகளும் பெற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து Houghton & Sunderland தெற்கில் தொழிலாளர் கட்சியே முன்னிலை வகிக்கிறது. இதில் தொழிலாளர் கட்சி சார்பில் நின்ற Bridget Philipson 16,210 வாக்குகளுடனும், கன்சர்வெடிவ் கட்சி 13,095 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
அதன் படி வெளியான முதல் இரண்டு இடங்களிலும் தொழிலாளர் கட்சியே முன்னிலை வகிக்கிறது.
பிரித்தானியா தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் முடிவு வெளியானது! முன்னிலையில் யார்? -
Reviewed by Author
on
December 13, 2019
Rating:

No comments:
Post a Comment