உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த உள்ள பிரித்தானியா!
அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, உலகில் பிரித்தானியாவின் நிலை முன்னேறும் என்றும், பிரான்ஸைவிட முன்னேறி, ஜேர்மனியின் பொருளாதார நிலையை மாற்றி அமைக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவுஸ்திரேலியாவின் குடியேற்ற விதிகளை பயன்படுத்தும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் திட்டங்கள் பல பொருளாதாராத்தில் ஊக்கமளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி பலகலைக்கழகங்கள் மற்றும் மருத்துவத் துறைகள் தங்களது போட்டியை தக்கவைத்துக்கொள்ள இந்த மாற்றங்களில் சிலவற்றை பயனுள்ளதாக அமையும்.
இதே வேளையில் ஜேர்மனி மற்றும் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்திய உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் இந்தியா கடந்த காலத்தில் 4ஆவது இடத்தை பிடித்ததால் 2019ஆம் ஆண்டில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. இது இன்னும் ஆறு ஆண்டுகளில் ஜேர்மனையும் 2034-ற்குள் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்லும்போது, உலகளவில் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சவுதி அரேபியா மாறலாம் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், 2034 ஆம் ஆண்டிற்குள் கனடா உலகின் எட்டாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்ரேலியா ஒரு இடம் முன்னேறி 13ஆவது இடத்திற்கு நகரும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த உள்ள பிரித்தானியா!
Reviewed by Author
on
December 27, 2019
Rating:

No comments:
Post a Comment