அண்மைய செய்திகள்

recent
-

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மரணம்! தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்தவர் -


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான பாபு நட்கர்னி தனது 86வது வயதில் காலமானார்.

41 டெஸ்டுகளில் விளையாடியுள்ள அவர் 88 விக்கெட் வீழ்த்தியதோடு 1,414 ரன்களும் எடுத்துள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான பாபு நட்கர்னி சிக்கனமாக பந்து வீசுவதில் கில்லாடியாக விளங்கினார்.

1964-ம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்தார்.
அந்த இன்னிங்சில் அவர் 32 ஓவர்கள் பந்து வீசி 27 மெய்டனுடன் வெறும் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் விக்கெட் எடுக்கவில்லை.
இதோடு மும்பை, மஹாராஷ்டிரா அணிகளுக்காக 191 முதல் தர போட்டிகளில் (8880 ரன்கள், 500 விக்கெட்) பங்கேற்றுள்ளார்.

பாபு நத்கர்னி வயது முதிர்வு காரணமாக நேற்று மும்பையில் காலமானார். இவருக்கு ஒரு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.
பாபுவின் மறைவுக்கு சச்சின் டெண்டுல்கர், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மரணம்! தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்தவர் - Reviewed by Author on January 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.