பெரும்போகத்தில் 8 மில் மெட்ரிக் தொன் அறுவடை எதிர்பார்ப்பு-நெல்லுக்கு உத்தரவாத விலை ரூ. 50; ஈரலிப்பானது ரூ.45
நெல் கொள்வனவு தொடர்பில் அரசாங்கம் உத்தரவாத விலையாக ரூபா 50 இனை நிர்ணயித்துள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (23) கொழும்பிலுள்ள தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று (22) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கப்பட்டுள்ளது.
2019 - 2020 பெரும்போக அறுவடை காலம் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ள நிலையில், சுமார் 8 மில்லியன் மெட்ரிக் தொன் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில், அரிசி இறக்குமதி செய்யப்படாமை காரணமாக, அரிசியின் விலை உயர்ந்துள்ளது. ஆயினும் இதன் மூலம் அந்நியச் செலாவணியில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீதப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வெளிநாட்டு நாணய விகித ஸ்திரத்தன்மை மற்றும் வட்டி விகிதமும் குறைவடைவதில் அது செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், அரிசி விலையை நிலையாக பேணுதல் மற்றும் விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலையில் கொள்வனவு செய்ய, தனியார் துறை அரிசி ஆலை உரிமையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 2019 - 2020 பெரும்போகத்தில் மேலதிக நெல்லை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் தலையிட வேண்டும் என, அமைச்சரவையினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக, தரமான (உரிய ஈரப்பதனுடனான) ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 50 எனும் குறைந்தபட்ச உத்தரவாத விலையையும், ஈரப்பதனுடனான ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 40 எனும் குறைந்தபட்ச உத்தரவாத விலையை நிர்ணயித்தல்.
அரசாங்கத்தின் நெல் கொள்வனவு செய்யும் வேலைத் திட்டத்தை மாவட்ட செயலாளர்கள்/ அரசாங்க அதிபர்கள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் மூலம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முப்படை, சிறைச்சாலை திணைக்களம், வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அரிசித் தேவைக்காக நேரடியாக அந்நிறுவனங்கள் மூலம் நெல்லைக் கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொள்வனவு செய்யப்படும் மொத்த நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கான பணிகளை உணவு ஆணையாளரிடமுள்ள கொண்டுள்ள அனைத்து களஞ்சியங்கள், நெல் சந்தைப்படுத்தல் சபை ஆகியவற்றை மாவட்ட செயலாளர்கள்/ அரசாங்க அதிபர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நெல்லை ஏற்றிச்செல்லும் பணிகளுக்காக அரசாங்கம் கொண்டுள்ள லொறி மற்றும் ட்ரக் வாகனங்களைப் பயன்படுத்தப்படவுள்ளது.
உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் நெல்லை கொள்வனவு செய்வதற்காக சிறிய, நடுத்தர அளவு, பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட நெல்லை கொள்வனவு செய்வோர்களுக்கு 8% வட்டி அடிப்படையில் 100 மில்லியன் ரூபா உறுதிமொழிக் கடன் அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஊடாக வழங்கப்படவுள்ளது.
பிரதான அரிசி உற்பத்தி மாவட்டமான பொலன்னறுவை, அநுராதபுரம், குருணாகல், வவுனியா, அம்பாறை, மட்டக்களப்பு, மொணராகலை மற்றும் அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்வதற்கான பொறுப்பை சில இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வேலைத்திட்டத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சுற்றறிக்கை ஆலோசனைகளை ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Reviewed by Author
on
January 23, 2020
Rating:

No comments:
Post a Comment