வாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
இதனால் 10-ல் நான்கு பேருக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தப் புற்றுநோயால் 42 சதவிகித ஆண்களும், 18 சதவிகிதப் பெண்களும் உயிரிழக்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.
புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு, வாயின் உள்பகுதியில் புண் போல ஆரம்பிக்கும்.
அது கொஞ்சம் கொஞ்சமாக உதடு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் என மற்ற எல்லாப் பகுதிகளையும் தாக்கி, மிக மோசமான வாய்ப் புற்றுநோயாக உருவெடுத்துவிடுகிறது.
இந்த புற்றுநோயிலிருந்து நமது உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் மாற்றம் செய்தாலே போதும் இதிலிருந்து விடுபட முடியும்.
அந்தவகையில் தற்போது வாய்ப்புற்று நோயிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என பார்ப்போம்.

- தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையே உள்ள அழுக்கை அகற்ற ஃபிளாஸ் பயன்படுத்த வேண்டும்.
- புகையிலை மெல்லுவதை, புகைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். வாயில் சிறிய புண் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
- தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.
- மஞ்சள், அடர் பச்சை நிறக் காய்கறிகள், கீரை, பூண்டு, திராட்சை, க்ரீன் டீ, சோயா, தக்காளி போன்ற உணவுகளைச் சாப்பிடுவது புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.
- ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரைச் சந்தித்து வாய் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- மாதத்துக்கு ஒரு முறை கையடக்கக் கண்ணாடியை வைத்துக்கொண்டு, வீக்கம், புண் போன்று ஏதேனும் உள்ளதா என்று பார்த்து, சந்தேகப்படும்படி இருந்தால், உடனடியாக உங்கள் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
வாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
Reviewed by Author
on
January 29, 2020
Rating:
No comments:
Post a Comment