சுவிஸில் காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞன்! அவருக்கு நடந்தது என்ன?
சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரிய முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 43 வயதான மகேஸ்வன் ரமேஸ்வரன் என்பவரே காணாமல் போயுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரிய நிலையில், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் பாசெல் மாநிலத்தில் வசித்து வந்த மகேஸ்வன் ரமேஸ்வரன் கடந்த ஒன்றரை மாதங்களாக காணாமல் போயுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கடற்புலிகளின் வாகன சாரதியாக இருந்தமை தொடர்பில் 2014ம் ஆண்டு இலங்கை புலனாய்வு பிரிவினரால் துன்புறுத்தப்பட்ட நிலையில், நாட்டிலிருந்து 2015ம் ஆண்டு வெளியேறியதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுவிஸில் அவரின் புகலிடம் மறுக்கப்பட்ட நிலையில், அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டாரா அல்லது வேறு வழிகளில் எதுவும் சிக்கியுள்ளாரா என்பது தொடர்பில் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இவர் தொடர்பில் யாராவது அறிந்திருந்தால் உறவினர்களுக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சுவிஸில் காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞன்! அவருக்கு நடந்தது என்ன?
Reviewed by Author
on
January 16, 2020
Rating:

No comments:
Post a Comment