ஒரே நேரத்தில் 1,10,000பார்வையாளர்கள்!... உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் சிறப்பம்சங்கள் -
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் சுமார் 1,00,024 ரசிகர்கள் அமரலாம், இதை விடவும் பெரியதாக 1,10,000 பேர் அமரக்கூடிய வகையில் புதிய மைதானம் கட்டப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மட்டுமின்றி பாட்மிண்டன், நீச்சல், தடகளம், குத்துச்சண்டை, கபடி, ஸ்குவாஸ், ஹொக்கி என மற்ற விளையாட்டு போட்டிகளுக்கான அகாடமிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கென்று தனி மாடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட 75 கார்ப்பரேட் பாக்ஸ்கள் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கார்ப்பரேட் பாக்ஸும் 25 இருக்கைகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மைதானத்தின் வெளிப்புற வளாகத்தில் 3 ஆயிரம் கார்கள், 10 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வருகிற 24 மற்றும் 25ம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வருகை தரும் போது இம்மைதானத்தை திறந்து வைக்கலாம் என தெரிகிறது.
ஒரே நேரத்தில் 1,10,000பார்வையாளர்கள்!... உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் சிறப்பம்சங்கள் -
Reviewed by Author
on
February 15, 2020
Rating:

No comments:
Post a Comment