400,000 பிரித்தானியர்கள் வரை கொரோனா வைரஸால் உயிரிழக்க வாய்ப்புள்ளது-அறிவியலாளர் எச்சரிக்கை!
பிரித்தானிய அறிவியலாளர் ஒருவர், கொரோனா வைரஸால் 400,000 பிரித்தானியர்கள் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொலைகார கொரோனா வைரஸ் குறித்து கேட்டபோது, லண்டன் இம்பீரியல் கல்லூரியின் சுகாதாரத்துறை பேராசிரியரான நீல் ஃபெர்குசன், இந்த ஒரு வைரஸ் எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றார்.அப்படியானால், 400,000 பிரித்தானியர்கள் கொரோனா வைரஸால் இறந்துவிடுவார்கள் என்று சொல்கிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது, அதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்த பேராசிரியர் நீல், இந்த விடயத்தில் தன்னைக் குறித்து மற்றவர்கள், இவர் குறைத்து கணித்துவிட்டார் என்று குற்றம் சாட்டுவதை விட அதிகம் கணித்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்படுவதையே விரும்புவதாக தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகள், 60 சதவிகிதம் பிரித்தானியர்கள் COVID-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளன.
அத்துடன் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் மொத்த பிரித்தானியர்களில் ஒரு சதவிகிதத்தினராவது இறக்க வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார் பேராசிரியர் நீல்.

400,000 பிரித்தானியர்கள் வரை கொரோனா வைரஸால் உயிரிழக்க வாய்ப்புள்ளது-அறிவியலாளர் எச்சரிக்கை!
Reviewed by Author
on
February 15, 2020
Rating:
No comments:
Post a Comment