முற்றிலும் மாறுபட்ட பெயருடன் மன்னராக பதவியேற்க இருக்கும் இளவரசர் சார்லஸ்:
பிரித்தானிய மக்கள் அவர் பதவியேற்கும்போது, மன்னர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், மகாராணியாருக்கு அடுத்து மன்னராகப் பதவியேற்க இருக்கும் இளவரசர் சார்லஸ், மன்னர் ஜார்ஜ் என்ற பெயரில் மன்னராக பதவியேற்க இருப்பதாக ராஜ விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இளவரசர் சார்லஸின் முழுப்பெயர், சார்லஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜ் என்பதாகும்.
இதற்கு முன்பு சார்லஸ் என்று பெயர் வைத்திருந்த மன்னர்களின் வாழ்வில் நிகழ்ந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக, அவர் மூன்றாம் சார்லஸ் என்ற பெயரை கைவிடுவது குறித்து 2005ஆம் ஆண்டு, தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

பிரித்தானிய மன்னர்களிலேயே தேசத்துரோக குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஒரே மன்னர் முதலாம் சார்லஸ் ஆவார்.
அவரது மகனான இரண்டாம் சார்லஸ் ஆட்சிக்காலத்தில்தான், கொள்ளைநோயும், லண்டனில் பெரும் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளன.

ஆகவே, ராஜ குடும்ப நிபுணர்கள் இளவரசர் சார்லஸ் பதவியேற்கும்போது, அந்த பெயரில் பதவியேற்கமாட்டார் என்று கருதுகிறார்கள்.
அதற்கு பதிலாக, அவர் மன்னர் ஏழாம் ஜார்ஜ் என்ற பெயரிலோ அல்லது மன்னர் பிலிப் என்ற பெயரிலோ அல்லது மன்னர் ஆர்தர் என்ற பெயரிலோ மன்னராக பதவியேற்பார் என அவர்கள் கருதுகிறார்கள்.

முற்றிலும் மாறுபட்ட பெயருடன் மன்னராக பதவியேற்க இருக்கும் இளவரசர் சார்லஸ்:
Reviewed by Author
on
February 09, 2020
Rating:
No comments:
Post a Comment