அண்மைய செய்திகள்

recent
-

176 பயணிகளுடன் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானம்: 1 பில்லியன் டொலர் இழப்பீடு கேட்கும் கனடா!


176 பயணிகளுடன் உக்ரேனிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட விவகாரத்தில், ஈரானிடம் 1 பில்லியன் டொலர் இழப்பீடு கேட்க கனடா திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம், ஒரு மூத்த ஈரானிய தளபதியின் படுகொலை தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்ட பதட்டங்களுக்கு மத்தியில், ஈரானில் இருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட, உக்ரைன் சர்வதேச போயிங் 737 விமானம் தற்செயலாக சுட்டுவீழ்த்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 57 கனேடியர்கள் அடங்குவர்.
இந்த நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானத்தின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கனேடிய வழக்கறிஞர்கள் தெஹ்ரான் மீது ஒரு வர்க்க நடவடிக்கை வழக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அதில், குறைந்தபட்சம் 1.1 பில்லியன் டொலர் இழப்பீடு கோருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் வேண்டுமென்றே அழிக்கப்பட்டதாகவும், அது ஒரு பயங்கரவாத செயல் எனவும் அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஜனவரி 24 அன்று டொராண்டோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து ஈரான் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


176 பயணிகளுடன் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானம்: 1 பில்லியன் டொலர் இழப்பீடு கேட்கும் கனடா! Reviewed by Author on February 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.