மன்னாரில் தனி நபரின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது-படங்கள்
தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 5 நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டம் இன்று புதன் கிழமை மாலை 6.45 மணியளவில் கைவிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரைச் சேர்ந்த இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ்(வயது-39) என்ற இளைஞர் சனிக்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வந்தார்.
இன்று புதன் கிழமை 5 ஆவது நாளாகவும் அவரது உண்ணாவிரதம் தொடர்ந்தது.
-இந்த நிலையில் குறித்த நபரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மன்னார் பிரஜைகள் குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு,குறித்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு குறித்த நபரின் முயற்சியை வேறு வடிவத்தில் முன்னெடுக்க ஆலோசனை வழங்கினர்.
இந்த நிலையில் குறித்த நபரின் உண்ணாவிரத போராட்டம் இன்று புதன் கிழமை மாலை 6.45 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் குறித்த நபரின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார்,பிரஜைகள் குழு பிரதி நிதிகள், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,மூர்வீதி ஜீம்மா பள்ளி மௌலவி எம்.அசீம்,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,மன்னார் நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ்,ஜோசப் தர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆகாரத்தை வழங்கி உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
February 27, 2020
Rating:
Reviewed by Author
on
February 27, 2020
Rating:

No comments:
Post a Comment