உலகளவில் 290 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு -அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிட்ட ஈரான்:
COVID-19 கொரோனா நோய்த்தொற்றினால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,000 க்கும் அதிகமாக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 3,286 ஐ எட்டியுள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக உலகநாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதன் விளைவாக 12 நாடுகள் பள்ளிகளை மூடியுள்ளன. இதனால் 290 மில்லியன் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தலைவர் ஆட்ரி அஷோலே (Audrey Azoulay) தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 13வது நாடாக, ஈரானில் உள்ள அனைத்து பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மார்ச் 20 அன்று நாட்டின் காலண்டர் ஆண்டின் இறுதி வரை மூடப்படும் என்று சுகாதார அமைச்சர் சயீத் நமகி தேசிய தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் தேசிய விடுமுறைகள் வழக்கம் போல விடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனை மக்கள் ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் எங்கும் மேற்கொள்ள கூடாது எனவும், வீட்டிலேயே இருந்து எங்கள் எச்சரிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வைரஸ் மிகவும் தீவிரமான தொற்றுநோயாகும். அதைப் பற்றி கேலி செய்யாதீர்கள் எனக்கூறியுள்ளார்.
நெருக்கடிகளின் போது தற்காலிக பள்ளி மூடல்கள் புதிதல்ல என்றாலும்கூட, தற்போதைய கல்வி சீர்குலைவு உலகளவில் ஈடு இணையற்றது. இது நீடித்தால், கல்வி உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என ஆட்ரி கவலை தெரிவித்துள்ளார்.
உலகளவில் 290 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு -அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிட்ட ஈரான்:
Reviewed by Author
on
March 06, 2020
Rating:

No comments:
Post a Comment