சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கொரோனா வைரஸ் எச்சரிக்கை! -
சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Schwyz மற்றும் St Gallen ஆகிய இடங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அதே போன்று சூரிச்சில் ஏழு பேருக்கும், அவற்றுடன் Freiburg, Bern, Grisons, Basel, Neuchatel,மற்றும் Vaud ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்று, தற்பொது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
சுவிட்சர்லாந்தில் 74 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உடல்நிலை பாதிக்கப்பட்ட கடந்த செவ்வாய் கிழமை Vaud-ல் இருக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் வைரஸ் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் அடங்கும்.
உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பத்து நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
தற்போதைய சூழலில் 111 பேர் வரையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கின்ற நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் பொது சுகாதார அலுவலகம் சுமார் 111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 58 பேர் ஜெனீவாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனையவர்களின் வைத்திய அறிக்கைகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலைமை தீவிரமானதுடன் மேலும் மோசமாகி வருவதாகவும், ஆனால் யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் சுகாதார அலுவலக அதிகாரி இன்று அறிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை 1000 க்கும் மேற்பட்ட மக்களுடன் வெளிப்புற தொடர்புகளை ஏற்படுத்தும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் சுவிஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கொரோனா வைரஸ் எச்சரிக்கை! -
Reviewed by Author
on
March 06, 2020
Rating:

No comments:
Post a Comment