அண்மைய செய்திகள்

recent
-

மதச் சார்பற்ற அரசியல் தலைவர்களை தேர்ந்தேடுக்க மக்களுக்கு வழிகாட்டுவதே சர்வமத தலைவர்களின் கடமையாகும்-மன்னார் சர்வமத பிரதிநிதிகள் தெரிவிப்பு-படங்கள்

மதச் சார்பற்ற அரசியல் தலைவர்களை தேர்ந்தேடுக்க மக்களுக்கு வழிகாட்டுவதே சர்வமத தலைவர்களின் கடமையாகும் என மன்னார் மாவட்ட சர்வ மத பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் வதந்திகள் மூலம் ஏற்படுகின்ற இன,மத ரீதியான வன்முறைகளை தடுக்கும் முகமாக தேசிய சமாதான பேரவை மற்றும் மன்னார் துயர் துடைப்பு மறு வாழ்வு சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட  நிகழ்வு   இன்று வெள்ளிக்கிழமை காலை   மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்  கேட்போர் கூடத்தில் தேசிய சமாதானப் பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அன்ரன் மெடோசன் பெரேரா தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சர்வமத பிரதி நிதிகள் அவ்வாறு தெரிவித்தனர்.

 சர்வ மத தலைவர்கள் மேலும் தெரிவிக்கையில்,,,,,

இன்றைய அரசியலில்; பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது.  அண்மையில் மன்னார் மாவட்ட ஆயர் வெளியிட்ட தவக்கால செய்தியில் மத சார்பற்ற ஒரு அரசியல் தலைவரை நாங்கள் ஆதரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

 அக்கருத்தை நாங்கள் வரவேற்கின்றோம். வன்னி தேர்தல் தொகுதியில் பதவிக்கு வருவதற்காக எல்லா வித அரசியல் சமய சமூக தனி மனித காரியங்களை ஆயுதமாக பயன் படுத்தி தவறான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.

 இது தற்போது சமூகத்தினுள் பெரிய பிரிவை ஏற்படுத்துகின்றது.

எனவே சமயத்தில் மத தலைவர்களாக சமூக தலைவர்களாக சரியான கருத்தை தெளிவு படுத்தி அரசியல் சமூக சமய பக்க சார்பின்றி நடத்துவதும்,தலைமைத்துவத்துக்கு வந்தவுடன் மத பக்க சார்பின்றி வழிநடத்தக் கூடிய ஒரு தலைவரை இனங்காட்ட கூடிய ஒரு பொறுப்பு மத தலைவர்களுக்கு இருக்கின்றது.
அரசியல் வேறு மதம் வேறு என்ற நிலைப்பாட்டில் தேர்தலில் செயற்பட வேண்டும்.
 மதத்தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவது தவிர்கப்பட வேண்டியது. –மதம் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு மத ஒற்றுமையை பிளவுபடுத்தக் கூடாது.

 அரசியல் வதிகள் மதங்களை பயன்படுத்தி பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடாது. மத ரீதியாக நாம் பிளவு பட்டு நம்முடைய  தியாகங்கள் , போரட்டங்களை கொச்சை படுத்தி விட கூடாது.

   நாம் ஒற்றுமையாக இல்லை என்பதை சர்வதேசத்துக்கு காட்டாவும் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
 அத்துடன் இந்த தேர்தலில் இன மத ஒற்றுமைக்காக செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்ற மத ரீதியான வன்முறைகள் தொடர்பாகவும், பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றினால் ஏற்பட்ட விபரீத பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு,  குறித்த பிரச்சினைகளை தீர்த்துகொள்வது    தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

குறித்த நிகழ்வில்  சர்வமத தலைவர்கள்,     விசேட தேவையுடையவர்கள் , பொது மக்கள் , சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடதக்கது.
குறிப்பு-
(போதகர் பத்திநாதன்,மௌலவி முஹம்மது ஜலீஸ்,அருட்சகோதரி ரூபராணி,அருட்தந்தை கே.லக்ஸ்மன் ஆகியோர் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.)















மதச் சார்பற்ற அரசியல் தலைவர்களை தேர்ந்தேடுக்க மக்களுக்கு வழிகாட்டுவதே சர்வமத தலைவர்களின் கடமையாகும்-மன்னார் சர்வமத பிரதிநிதிகள் தெரிவிப்பு-படங்கள் Reviewed by Author on March 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.