வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்-மன்னார் கலைஞர்களும்
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2020 இற்கான விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடந்தோறும் வழங்கப்படுகின்ற விருதுகளுக்கான விண்ணப்பங்கள் 2020 இற்கு கோரப்பட்டுள்ளன.
எனவே மன்னார் மாவட்ட 05 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொருத்தமான கலைஞர்கள் கீழ் குறிப்பிடப்படும் விருதுகளுக்குரிய விண்ணப்பங்களை பிரதேச செயலகத்தில் பெற்று அதனை பூரணப்படுத்தி வழங்குமாறு மன்னார் மாவட்ட 05 பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ள
- கலை இலக்கிய மன்றங்களுக்கான ஆக்கதிறன் போட்டி 2020,
- வடமாகாண அமைச்சு திணைக்களங்களில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்களுக்கான ஆக்கதிறன் போட்டி,
- கலைக்குரிசில் போட்டி2020,
- இளங்கலைஞர் விருது 2020,
- சிறந்த நூல் பரிசு தேர்வு 2020,
- நூல் கொள்வனவு 2020,
- நடுவர் தெரிவு 2020 போன்றவற்றுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்-மன்னார் கலைஞர்களும்
Reviewed by Author
on
March 15, 2020
Rating:

No comments:
Post a Comment