இலங்கை கத்தோலிக்கர்களுக்கு பேராயர் மல்கம் ரஞ்சித் விடுத்துள்ள அறிவித்தல் -
இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இம்மாதம் இறுதிவரையில் ஆராதனைகள் மற்றும் வழிபாடுகளை நடத்துவதை முடிந்தளவிற்கு தவிர்த்து கொள்ளுமாறு கொழும்பு மாவட்ட பேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேராயர் பணிமனையில் இன்று நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்து கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
எனவே நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் திருப்பலிகள், வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் நடத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை கேட்டுகொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரையில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை கத்தோலிக்கர்களுக்கு பேராயர் மல்கம் ரஞ்சித் விடுத்துள்ள அறிவித்தல் -
Reviewed by Author
on
March 15, 2020
Rating:

No comments:
Post a Comment