வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக இ.பிரதாபன் பதவியேற்பு
புதிய பிரதேச செயலாளரை வரவேற்கும் நிகழ்வு இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இவர் முன்னதாக முல்லைத்தீவு பகுதியில் உதவி பிரதேச செயலாளராகவும், புதுக்குடியிருப்பு பகுதியில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
புதிய பிரதேச செயலாளரை வரவேற்கும் நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளரிடையேயான கலந்துரையாடல் ஒன்றும் பிரதேச செயலக மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக இ.பிரதாபன் பதவியேற்பு
Reviewed by Author
on
March 04, 2020
Rating:

No comments:
Post a Comment