ஐ.நா.வை எச்சரிக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதி
மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த அப்துல் அசிஸ் முகமது எனும் அகதி, ஆஸ்திரேலியாவின் மனித உரிமை மீறல்களை பிற நாடுகளும் பின்பற்றக்கூடும் என ஐ.நா.வில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தற்போது சுவிட்சர்லாந்தில் தஞ்ச உரிமை பெற்றுள்ள அப்துல் அசிஸ், பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் அகதிகள் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற இந்த அகதிகள், சுமார் 7 ஆண்டுகள் இத்தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
“காலவரையின்றி அகதிகளை தடுத்து வைக்க ஆஸ்திரேலிய அரசை அனுமதிக்கக்கூடாது. ஏனெனில், ஆஸ்திரேலியாவின் மனித உரிமை துஷ்பிரோயகங்களை பிற நாடுகளும் தற்போது பின்பற்றுகின்றன,” என ஐ.நா. மனித உரிமை அவையில் பேசியிருக்கிறார் அப்துல் அசிஸ்.
“பப்பு நியூ கினியா மற்றும் நவுருவில் ஆஸ்திரேலிய அரசால் சிறைவைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அங்குள்ள மனிதர்கள் உடல் ரீதியாக மன ரீதியாக பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர். இதுவரை 12 பேர் அங்கு உயிரிழந்திருக்கின்றனர்,” எனத் தெரிவித்திருகிறார் அசிஸ்.
இன்றைய நிலையில், பப்பு நியூ கினியாவில் 230 அகதிகளும் நவுருத்தீவில் 210 அகதிகளும் எந்தவித மீள்குடியேற்ற வாய்ப்புமின்றி வைக்கப்பட்டுள்ளனர்.

Reviewed by Author
on
March 13, 2020
Rating:

No comments:
Post a Comment