கொரோனா தீவிரம்: இலங்கையில் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் -
இலங்கை வருகின்ற வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் இலங்கையர்களை தொடர்ந்து 15 நாட்கள் தனித்தனியே பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இதனைக் கூறினார்.
இங்கு பேசிய சுகாதார சேவைப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க, இலங்கை வழியே பயணிக்கும் சுற்றுலாக் கப்பல்களில் இருந்து கப்பல் அதிகாரிகளைத் தவிர, பயணிகள் துறைமுகத்தில் இறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி வரும் நிலையில், உலகெங்கும் 3000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர்.
குறிப்பாக சீனாவில் இந்த வைரஸ் காரணமாக 2000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தீவிரம்: இலங்கையில் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் -
Reviewed by Author
on
March 04, 2020
Rating:

No comments:
Post a Comment