அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த ஒழுங்குகள் முன்னெடுப்பு-அரசாங்க அதிபர் C.A.மோகன்றாஸ்.

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த ஒழுங்குகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை(13) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் 76 வாக்களிப்பு நிலையங்களில் 88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட இம்முறை சுமார் ஆயிரம் வாக்குகள் குறைவடைந்துள்ளது.

மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதிக்கான  வேட்புமனு தாக்கல் வவுனியாவில் இடம் பெற்று வருகின்றது.

12 ஆம் திகதி வியாழக்கிழமையில் இருந்து எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வரை வவுனியாவில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியும்.

கடமை நாட்களில் மாத்திரமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். தேர்தல் நோக்கத்திற்காக அரச சொத்துக்களை பயண்படுத்துதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

எதிர் வரும் 18 ஆம் திகதி முதல் முறைப்பாட்டு நிலையம் மாவட்டச் செயலகம் உற்பட மடு,முசலி பிரதேச செயலகங்களில்   இயங்கவுள்ளது.

அரச சொத்துக்களை தேர்தலுக்கு பயண்படுத்துதல் உற்பட தேர்தல் வண் முறைகளை அங்கு முறைப்பாடு செய்ய முடியும்.
மேலும் அரச நிகழ்வுகளில்,அடிக்கல் நாட்டுதல் போன்ற நிகழ்வுகளில் தேர்தல் முடியும் வரை அரசியல் பிரமுகர்களை அழைக்க முடியாது.

அரச அலுவலகர்கள், மதத்தலைவர்களுடன் நிகழ்வை நடாத்த முடியும். திட்டமிட்ட நிகழ்வுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தி அனுமதி பெற்றே நடத்த முடியும்.

அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியல் உரிமை அற்றவர்கள்.வாக்களிக்க மாத்திரமே எமக்கு உரிமை உள்ளது.ஏனைய விடையங்களில் நாங்கள் ஈடுபட முடியாது  என தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் அத்தியட்சகர் ஜே.ஜெனிற்றன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த ஒழுங்குகள் முன்னெடுப்பு-அரசாங்க அதிபர் C.A.மோகன்றாஸ். Reviewed by Author on March 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.