அண்மைய செய்திகள்

recent
-

வடக்கை இராணுவ நிர்வாகத்தின் ஆட்சி செய்ய ஜனாதிபதி முயற்சி: மாவை -


வடக்கு மாகாணத்தில் சிவில் அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பிரிவுகளின் அதிகாரிங்கள் நியமிக்கப்படுவதன் மூலம் வடக்கு மக்களை இராணுவ நிர்வாகத்தின் கீழ் ஆட்சி செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முயற்சித்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அண்மையில் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைய கல்வி தகுதி இல்லாம இளைஞர், யுவதிகளுக்கு ஒரு லட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதாக கூறி நேர்முக பரீட்சைகளை நடத்தினர்.

இந்த நேர்முகப் பரீட்சைகளை பாதுகாப்பு படையின் உறுப்பினர்கள் நடத்தினர். இதன் மூலம் வடக்கில் சிவில் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினரை பயன்படுத்தும் முயற்சி என்பது தெரியவந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் எப்போதும் நடக்காத வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன.

இதன் பின்னர் வடக்கின் அபிவிருத்தி மாத்திரமல்லாது தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணவும் முயற்சிக்கப்பட்டது.
வடக்கின் அபிவிருத்திக்காக பெருந்தொகை பணம் ஒதுக்கப்பட்டது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியை புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் இடைநிறுத்தியுள்ளனர்.
இவை அனைத்தையும் கண்காணித்து இம்முறை பொதுத் தேர்தலில் மக்கள் புத்திசாலித்தனமாக தீர்மானத்தை எடுப்பார்கள் என நாம் நம்புகிறோம் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
வடக்கை இராணுவ நிர்வாகத்தின் ஆட்சி செய்ய ஜனாதிபதி முயற்சி: மாவை - Reviewed by Author on March 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.