மன்னார் மண்ணின் மைந்தன் S.N.டிலானுக்கு இலங்கை ஊடகத்துறையில் அதி உச்ச விருது
இலங்கை ஊடகத்துறையில் அதி உச்ச விருது SILM NIELSEN PEOPLE'S AWARDS
RADIO PRESENTER OF THE YEAR-2020 வானொலி ரசிகர்களே இதற்கான நடுவர்கள் கடந்த ஆண்டைப்போலவே இம்முறையும் இலங்கையின் பிரபல சிங்கள,ஆங்கில அறிவிப்பாளர்களுடன் தமிழ் பிரிவில் ஒரு அறிவிப்பாளனாக S.N.டிலான் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.
இலங்கை சந்தைப்படுத்தல் துறையில் தடம் பதித்த நாமத்தை கொண்ட SILM NIELSEN இம்முறையும் மிக உயரிய விருதுக்கான வாய்ப்பு மொழி பிரிவுக்கு மட்டுப்படுத்தப்படாத முழு இலங்கையரும் தெரிவு செய்யும் விருது.
0-03-2020 நடைபெற்ற இவ் விருது வழங்கும் நிகழ்வில் மக்கள் மனம் வென்ற இலங்கையின் சிறந்த அறிவிப்பாளராக சகோதர மொழி அறிவிப்பாளர்களோடு போட்டியிடும் ஒரே ஒரு தமிழ் அறிவிப்பாளராக மன்னார் மண்ணின் மைந்தன் அறிவிப்பாளர் S.N.டிலான் சூரியன்.
3 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- இலங்கையின் சிறந்த இளையோர் வானொலி,
- இலங்கை வானொலிகளில் மிக சிறந்த நிகழ்ச்சிக்காக பொற்காலப்புதன்
- போட்டியிடுவதோடு சிறந்த அறிவிப்பாளராக S.N.டிலான்
இன பேதமில்லாமல் இலங்கை முழுவதும் தேடி பெற்ற முடிவுகளின் இந்த ஆண்டுக்கான மக்கள் மனம் வென்ற இலங்கையின் சிறந்த அறிவிப்பாளராக மன்னார் மண்ணின் மைந்தன் S.N.டிலான் வெற்றி வாகை சூடியுள்ளார்.
இலங்கையின் முதற்தர வானொலியாம் சூரியன் பண்பலையின் 14ஆண்டுக்குமேலாக சிறந்த அறிவிப்பளராக நிகழ்ச்சி முகாமையாளராக திறமையினைவெளிப்படுத்தி வரும் S.N.டிலானுக்கு மக்களின் அங்கிகாரமே இவ்விருது
மன்னாருக்கு பெருமை சேர்த்த S.N.டிலான் அவர்களுக்கு நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
மன்னார் மண்ணின் மைந்தன் S.N.டிலானுக்கு இலங்கை ஊடகத்துறையில் அதி உச்ச விருது
Reviewed by Author
on
March 09, 2020
Rating:

No comments:
Post a Comment