ஜேர்மனியில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்த தமிழக சிறுவன் -
சமையல் கலைஞர்களுக்கான களினெரி ஆர்டிஸ்டிக் (culinary artistic) ஒலிம்பிக் போட்டியானது ஜேர்மனியின் ஸ்டட்கார்ட்டில் பிப்ரவரி 14 முதல் 19 வரை நடைபெற்றது.
இந்த போட்டியில், 59 நாடுகளைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள் 7,000 மெனுக்களை தயாரித்தனர்.
இதில் இந்தியாவின் சார்பில் சென்னையை சேர்ந்த யஷ்வந்த் குமார் என்கிற 16 வயது சிறுவன் கலந்துகொண்டு உலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளார்.
 
 வெஜிடபிள் கார்விங், பேஸ்ட்டி ஆர்ட்டிஸ்டிக் என்ற இரு பிரிவுகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற யஷ்வந்த் மிக சிறப்பான படைப்புகளை செய்து அசத்தி இரண்டு பிரிவுகளிலும் தலா இரண்டு என மொத்தம் நான்கு வெள்ளிப் பதக்கங்கள் வென்றார்.
இதன்மூலம் உலகின் இளம் செஃப் என்ற பெருமையும் பெற்றார்.
 
 இந்த நிலையில் இந்தியா திரும்பிய அவருக்கு தனியார் நட்சத்திர ஓட்டலில் தென்னிந்திய சமையல் கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், கூட்டமைப்பின் தலைவர் தாமோதரன் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
 
 இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தாமோதரன், "அவரை விட மிகவும் வயதான மற்றும் அனுபவம் வாய்ந்த போட்டியாளர்களுக்கு எதிராக விருதுகளை வென்றிருப்பது எளிய சாதனை அல்ல" என தெரிவித்தார்.
ஜேர்மனியில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்த தமிழக சிறுவன் - 
![]() Reviewed by Author
        on 
        
March 04, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 04, 2020
 
        Rating: 
       
 
 

 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment