அம்மன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள், ஒரு சிறப்பு பார்வை
தமிழ் திரையுலகில் மக்கள் மத்தியில் மிக சுலபமாக போய் சேரும் ஒரே படம் என்றால் அது சாமி படமாக தான் இருக்கும்.
இதனை திரையுலகில் சிறப்பாக செய்து வந்தவர் இய்குனார் ராமநாராயணன் தான். சாமி படங்களிலேயே பல விதத்தில் மக்களுக்கு படமாக்கி தந்தவர் இவர்.
மேலும் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதுக்கு ஒரு தனி துணிவு இருக்க வேண்டும்.
அந்த வகையில் தற்போது ரம்யா கிருஷ்ணனில் இருந்து நயன்தாரா வரை அம்மன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள் யார் யார் என்பதனை இப்போது ஒரு சிறப்பு பார்வையாக பார்ப்போம்.
ரம்யா கிருஷ்ணன் :
கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் அம்மன். இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் அம்மன் தான். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் அப்படி அமைத்திருப்பார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த படம் ரம்யாவிற்கு மிக பெரிய பெயரை மக்கள் மத்தியில் வாங்கி தந்தது என்று தான் கூறவேண்டும்.
 
 மீனா :
இயக்குனர் ராமநாராயணன் இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் இடையே மிக பெரிய வரவேற்பை அடைந்த படம் பாளையத்து அம்மன். இப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் மிக சிறந்த முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்திருப்பார் நடிகை மீனா.
 
 ரோஜா :
2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் போட்டு அம்மன். இப்படத்தில் ரோஜா தனக்கு அமைந்த அம்மன் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்தார் என்று தான் கூறவேண்டும். இப்படத்தையும் இயக்குனர் ராமநாராயணன் தான் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 விஜயசாந்தி :
சண்டையிடும் காட்சிகளில் நடிகை விஜயசாந்தி எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிவோம். ஆனால் 2002ஆம் ஆண்டு பாரதி கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஸ்ரீ பண்ணாரி அம்மன் எனும் படத்தில் இவருக்கு கிடைத்த அம்மன் கதாபாத்திரத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு சிறந்த முறையில் நடித்திருப்பார்.
 
 ஸ்ரீ தேவி :
ஹிந்தியில் வெளிவந்த Gair Kaanooni எனும் படத்தில் ஸ்ரீ லட்சுமி தேவியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரீ தேவி. இப்படத்தை ஹிந்தியில் பிரபல இயக்குனரான Prayag ராஜ் என்பவர் இயக்கி இருந்தார்.
 
 ராதா :
1989ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் மீனாட்சி திருவிளையாடல். இப்படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம் மீனாட்சி அம்மன் தான். அந்த கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவிற்கு வந்திருக்காது என்று தான் கூறவேண்டும். அந்த அளவிற்கு மிக சிறந்த முறையில் நடித்திருப்பார் நடிகை ராதா.
 
 நயன்தாரா :
என்.ஜே. சரவணன் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்து முடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். சமீபத்தில் தான் இப்படத்தின் First மற்றும் second லுக் வெளிவந்திருந்தது. இப்படத்திற்காக நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் அவளோடு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 அம்மன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள், ஒரு சிறப்பு பார்வை
 Reviewed by Author
        on 
        
March 04, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 04, 2020
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
March 04, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 04, 2020
 
        Rating: 
 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment