மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவையினால்1000 முகக்கவசம்.......படங்கள்
மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் மன்னார் பாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் அவர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை ஒரு தொகுதி முகக்கவசம் மற்றும் கிருமி நீக்கி என்பன கையளிக்கப்பட்டது.
லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலயத்தின் உதவியுடன் வவுனியா அந்தனர் ஒன்றியத்தின் அனுசரனையுடன் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் வழங்கி வைக்கப்பட்டது.
-இதன் போது கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது உன்னதமான பணியாற்றி வரும் மருத்துவ துறை சார் உத்தியோகத்தர்கள் அனைவரது நலன் வேண்டியும் உலக மக்களின் நலன் வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவையினால்1000 முகக்கவசம்.......படங்கள்
Reviewed by Author
on
April 17, 2020
Rating:

No comments:
Post a Comment