கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 30 லட்சம் பேர் பாதிப்பு! 2 லட்சத்து 11 ஆயிரம் பேர் பலி -
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டது.
தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலகின் பெரும் வல்லரசு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
எனினும், கொரோனா வைரஸ் தொற்றின தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.
அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றினால் 3,055,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாவும், 211,065 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
919,366 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,925,220 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 56,446 பேர் தீவிர நிலையில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 30 லட்சம் பேர் பாதிப்பு! 2 லட்சத்து 11 ஆயிரம் பேர் பலி -
Reviewed by Author
on
April 28, 2020
Rating:
Reviewed by Author
on
April 28, 2020
Rating:


No comments:
Post a Comment