கொரோனாவை எதிர்கொள்ள அரசு நிர்வாணமாக அனுப்புகிறது! பிரான்ஸ் செவிலியர்கள் வேதனை -
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று, தற்போது நாட்டில் 82,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,507 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காக அங்கிருக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வாரத்தின் துவக்கத்தில், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் துவங்கியது. அதாவது, செவிலியர்கள் பலர்
அரசாங்கத்திற்கு எதிராக நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தொற்றுநோயை எதிர்கொள்ள எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள் என்று குறிப்பிட்டு, #Poilcontrelecovid (கொரோனாவுக்கு எதிராக நிர்வாணமாக) என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, அமைதியான ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வயதினரின் மருத்துவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இது குறித்து பிரான்ஸின் Perpignan-ல் இருக்கும் செவிலியர் ஒருவர் கூறுகையில், அரசாங்கம் அனைவருக்கும், எங்கள் நோயாளிகளுக்கும், நமக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.
இதன் காரணமாகவே, இந்த தொற்றுநோயை எதிர்கொள்ள அரசாங்கம் எங்களை நிர்வாணமாக அனுப்புவதால் நிர்வாணமாக இருக்க இந்த பிரச்சாரத்தின் மூலம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், எல்லோரும் பயப்படுகிறார்கள், ஏனெனில் நோயாளிகளை பார்க்கிறோம், அதன் பின் வீட்டிற்கு செல்கிறோம். சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பார்ப்பதால், நாமே அந்த நோயை வீட்டிற்கு கொண்டு வர முடியும் என்று நினைக்கின்றனர்.
நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சையளிப்பதற்கும், எங்களுக்கும் எங்கள் நோயாளிகளுக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்தாமல் இருப்பதற்கும், எங்களிடம் இல்லாத பாதுகாப்பு உபகரணங்கள் தேவை.
உள்ளூர் மருத்துவ ஊழியர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ள முக மூடிகள் எல்லாம் பழைய முகமூடிகள். 15 முதல் 20 ஆண்டுகளாக நம் நாட்டின் சுகாதார துறை மோசமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவை எதிர்கொள்ள அரசு நிர்வாணமாக அனுப்புகிறது! பிரான்ஸ் செவிலியர்கள் வேதனை -
Reviewed by Author
on
April 05, 2020
Rating:
Reviewed by Author
on
April 05, 2020
Rating:


No comments:
Post a Comment