கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல்!
சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸ் தற்போது, உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, உயிரை பறிக்கும் கொடிய நோயாக மாறி வருகிறது.
இதன் காரணமாக தற்போது வரை(சனிக்கிழமை மார்ச் 4-ஆம் திகதி இரவு நேரப்படி) உலகம் முழுவதிலும், 1,172,889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 62,829 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் நோயின் பிறப்பிடம் என்று கூறப்படும் சீனா 6-வது இடத்திலும், அமெரிக்கா முதல் இடத்திலும் உள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் ஐரோப்பிய நாடுகளே அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த வரிசையில் உள்ளன.

இதற்கு அடுத்தபடியாக 6-வது இடத்தில் சீனாவில் 81,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,326 பேர் உயிரிழந்துள்ளனர். 7-வது இடத்தில் ஈரான் 55,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,452 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் 41,903 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4,313 பேர் உயிரிழந்துள்ளதால், 8-வது இடத்திலும், சுவிட்சர்லாந்தில், 20,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 641 பேர் உயிரிழந்துள்ளதால், 10-வது இடத்திலும் உள்ளது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் இருந்தாலும், இந்த வைரஸால் அதிக உயிர்களை இழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதல் இடத்தில் உள்ளது.
அந்நாட்டில் 15,362 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக ஸ்பெயின், மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன.

மேலும் உலக அளவில் மொத்தம் 1,172,889 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில், 242,100 பேர் இந்த நோயில் இருந்து மீண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல்!
Reviewed by Author
on
April 05, 2020
Rating:
No comments:
Post a Comment