கொரோனா வைரஸ் தொற்று! யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை -
கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்றைய தினம் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவர்களில் மூன்று பேருக்கான இரத்த மாதிரி பெறப்பட்ட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், உலகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 64 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையிலும், 166 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று குறித்த யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் இவ்வாறு கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று! யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை -
Reviewed by Author
on
April 05, 2020
Rating:

No comments:
Post a Comment