மன்னார்- நடுக்குடா காற்றாலை மின்சக்தி உற்பத்தி திட்ட பகுதியில் குழப்பநிலை-வீதிக்கு இறங்கிய மக்கள்....
மன்னார்-தலை மன்னார் பிரதான வீதி,நடுக்குடா பகுதியில் காற்றாலை மின்சக்தி உற்பத்தி திட்ட வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வந்த நிலையில் குறித்த வேலைத்திட்டங்கள் இடை நிறுத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கனரக வாகனங்களில் பொருட்கள் கொண்டு வரப்பட்ட நிலையில்,குறித்த பகுதி மக்கள் சனிக்கிழமை11-04-2020 காலை வீதியில் இறங்கி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
மன்னார்-தலை மன்னார் பிரதான வீதி,நடுக்குடா பகுதியில் காற்றாலை மின்சக்தி உற்பத்தி திட்ட வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ் நிலை காரணமாக குறித்த வேலைத் திட்டங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை மின்சக்தி உற்பத்தி திட்ட கட்டுமானப்பணிக்கு வையான உதிரிப்பாகங்கள் பல கனரக வாகனங்களில் நடுக்குடா பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.
-பொருட்களை கொண்டு வந்தவர்கள் சுமார் 15 ற்கும் மேற்பட்டவர்கள் குறித்த பகுதியில் நடமாடித் திரிந்துள்ளனர்.
இதனை அவதானித்த மக்கள் நிலமையை அறிந்து கொண்டு தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வருவதை தடுக்கக்கோரி 11-04-2020 சனிக்கிழமை காலை நடுக்குடா பகுதியில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் பொலிஸாரும், இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளமையினால் வீதியில் மக்களை ஒன்று கூட வேண்டாம் எனவும், உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறும் கோரி இருந்ததோடு, எவ்வித நடவடிக்கையும் இடம் பெறாது என அவர்கள் மக்களிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மன்னார் பிரதேசச் செயலாளர் குறித்த பகுதிக்கு வருகை தந்து மக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து கொண்டார்.
இதன் போது 10-04-2020 வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற கூட்டத்தின் போது குறித்த வேலைத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொண்டு எதிர் வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
-எனினும் தற்போது பொருட்களுடன் வந்துள்ளவர்கள் எந்த அடிப்படையில் வந்துள்ளார்கள் என்பது தொடர்பில் தெரியவில்லை.
எனினும் மக்களை பாதீக்கின்ற வகையில் தவறாக முன்னெடுக்கப்படுகின்ற எந்த ஒரு வேளைத்திட்டத்திற்கும் அனுமதி வழங்க மாட்டோம் என பிரதேசச் செயலாளர் மக்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதேசச் செயலாளரின் வேண்டு கோளுக்கு அமைவாக மக்கள் அங்கிருந்து சென்றனர்.

Reviewed by Author
on
April 12, 2020
Rating:

No comments:
Post a Comment